பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிரியன் அவர்களின் சீரிய முயற்சியினால், தமிழகத்திலேயே முதன் முதலாக 2013-ம் வருடம் முதல் SRM பல்கலைக்கழகத்தில் சினிமா பாடல்கள் இயற்றுவதற்கான ஒரு வருட (தினசரி/வாரம்) பட்டய படிப்பு(Diploma ) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. கவிதை எழுதும் ஆற்றல் மிக்கவர்கள் இதில் இணையத் தகுதியானவர்கள்.இந்த வருடம் 40 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட உள்ளது. அனுபவமிக்கப் பாடலாசிரியர்கள்,இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்ற உள்ளனர். ஒரு வருட படிப்பிலேயே திறமையுள்ளவர்களுக்கு சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்புகளும் கிடைக்கவிருக்கின்றன. பட்டய சான்றிதழ் பலகலைக் கழகத்தால் வழங்கப்படும்.

இப் பட்டயப் படிப்பில் சேர கவி விசை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ் வாய்ப்பினைத் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் அனைத்து கவிஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது

இப் பெரிய சந்தர்ப்பத்தினை கவிஞர்களுக்கு வழங்க அரும்பாடுபட்ட திரைப்பட பாடலாசிரியர் பிரியன் அவர்களுக்கு தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேசிய நுல் திருக்குறள் - கருத்துக்கள்

https://groups.google.com/group/anbudan/browse_thread/thread/13e4c4d79a2a0c61?hl=tr

 
 
 

திருக்குறளை தேசிய நூலாக்க கோரி நடைபயணம்

 

 

 

 

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைப்பயணம்

வடலூர்: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் சார்பில் வடலூர் வள்ளலார் கோட்டத்திலிருந்து சென்னை வள்ளூவர் கோட்டத்துக்கு நடைப்பயணம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தை ஊரன் அடிகளார் தொடங்கி வைத்தார். 

விழாவில் திருக்குறள் அரசு கழகம் மாநில அமைப்பு செயலாளர் முத்துக்குமரன், சாந்தி கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாரியப்பன், அரிமா சங்க தலைவர் சிவசுப்பிரமணியன், கெங்கை கொண்டான் நூலகர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர். 

பின்னர் தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்க செயலாளர் கலைஅரசன் தலைமையில் 50 கவிஞர்கள் கைகளில் திருவள்ளுவர் படத்தை ஏந்தியவாறே நடைபயணம் புறப்பட்டனர். தங்களது கோரிக்கை வாசகங்களை கொண்ட அட்டைகளையும் ஏந்தி சென்றார்கள்.

அவர்கள் பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வரும் 22ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் சென்றடைவார்கள். 

Make a Free Website with Yola.