-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேசிய நுல் திருக்குறள் - கருத்துக்கள்

https://groups.google.com/group/anbudan/browse_thread/thread/13e4c4d79a2a0c61?hl=tr


தமிழுக்கு முன்னுரிமை வழங்க தமிழ் இலக்கிய அமைப்புகளின் கூட்டமைப்பினர்  ஆர்ப்பாட்டம்

மாநில அரசுகள் கவனித்து தமிழுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழ் இலக்கிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் 22-07-2017 அன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இவ் ஆர்ப்பாட்டத்திற்கு  தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கத்தின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான செம்மொழிப் போராளி கவிஞர் க.ச கலையரசன் தலைமை வகித்தார். செஞ்சியில் இயங்கி வரும் தமிழ் மாமன்றத்தின் நிறுவனர் மருத்துவர் வ.நா தன்மானன் வரவேற்றார். திரைப்பட இயக்கு நர் வி. சேகர் முன்னிலை வகித்தார். தொடக்க கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழில் வழங்கவும், 

 

தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சி மொழி என்று (27/12/1956)அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை 

நடைமுறைப்படுத்தவும், தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும், அரசு ஊழியர்களின் வாரிசுகள் அரசு பள்ளியில் படிக்க சட்டமியற்றக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூறிற்கும் மேற்ப்பட்ட தமிழ் அமைப்புகள் பங்கேற்று மா நில மத்திய அரசுகளிடம் வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் கோரிக்கை முழக்கமிட்டனர்.


இந்தியாவின் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் தற்போது சிங்கப்பூர். இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த 10 நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பின் ஆட்சி மொழியாகவும் தமிழ் இருந்து வருகிறது. கனடாவில் ஜனவரி மாதம் தமிழ்ப் பராம்பரிய மாதமாக கொண்டாட்ப்படுகிறது. அங்கு தமிழ் சிறுபான்மையினர் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தமிழ் சிறுபான்மையினர் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. மொரீசியஸ் மற்றும் செசெல்ஸ் நாட்டு கரன்சிகளில் தமிழ் அச்சிடப்பட்டுள்ளது.

 

தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள பிரஞ்ச் பகுதியான ரியூனியனில் கலாச்சாரம் மற்றும் அரசியலில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.இது தவிர இந்தியாவில் அரியானா மற்றும் சண்டிகரில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்துள்ளதுஎன்பது கவனிக்கத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளுவர் ஞான மன்றம் , செயம்கொண்ட சோழபுரம், திருக்கோவிலூர் தமிழ்ச்சங்கம், கவிக்குயில் கவி மன்றம்- மாங்காடு, கூடல் நகர் கவிஞர் பேரவை-நீலகிரி, உலகத் தமிழ் கழகம், உலக திருக்குறள் மையம், தமிழ் பண்பாட்டுச்சங்கம், தமிழர் கழகம்-மாத்தூர்,அறம் இலக்கிய அமைப்பு- ஓசூர், திருக்குறள் இலக்கிய மன்றம் - அந்திமஞ்சாரிப்பேட்டை, பாவலர் பாமன்றம் -பூவிருந்தமல்லி, உலகப் பொதுமறை திருக்குற்ள் சங்கம் - வில்லிவாக்கம், தஞ்சை சோழராசன் நாடகமன்றம், செந்தமிழ் கலைப் படைப்பாளிகள் சங்கம், திருக்குறள் இலக்கியக் கழகம், தலைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ் தேசிய குடியரசு இயக்கம், தந்தை பெரியார் திராவிட கழகம், நண்பர்கள் நாடக குழு, ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம், தமிழ்வழி வழிபாட்டுக் குழு, தமிழ்க் கவிஞர் பேரவை, தமிழ்வழிக் கல்வி இயயக்கம் - அரியலூர், குறிஞ்சி இலக்கிய மன்றம், சோலைக்காட்டு படைப்பாளிகள் வட்டம், திருக்குறள் நற்பணி இயக்கம், எழில் கலைமன்றம், மின்னல் தமிழ் பணி, முத்தமிழ் மாமன்றம்-புதுவை, கடலோசை கலைமன்றம்- சென்னை, சிலம்பொலி தமிழ்த்தரணி மன்றம், அருந்தமிழ் கலை இலக்கிய மன்றம் -பெரம்பூர், கூடு இலக்கிய வட்டம், விழுதுகள் அறக்கட்டளை, திருவள்ளுவர் திருச்சபை அறக்கட்டளைமேலும் பல இலக்கிய அமைப்பினர் கலந்து கொண்டனர்.  செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இடமாற்றம் செய்யவிருப்பதைக் கண்டித்தும் கோசங்கள் எழுப்பினர்.

 

தமிழர்களின் வேண்டுகோளிற்க்கும், பிரச்சினைகளுக்கும் செவி சாய்க்காத மாநில மத்திய அரசுகள், இலக்கிய கூட்டமைப்பினரின் வேண்டு கோளினை நிறைவேற்ற தகுந்த காலம் இதுவென நம்பலாம்,  பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றியதை யாவரும் அறிந்திருப்பீர்கள். 

 தமிழ், தமிழர் நலனிற்காக நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டில் வளர்ந்து வரும் சூழலில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் மாநில மத்திய அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. 

 

 
 
 

திருக்குறளை தேசிய நூலாக்க கோரி நடைபயணம்

 

 

 

 

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைப்பயணம்

வடலூர்: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் சார்பில் வடலூர் வள்ளலார் கோட்டத்திலிருந்து சென்னை வள்ளூவர் கோட்டத்துக்கு நடைப்பயணம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தை ஊரன் அடிகளார் தொடங்கி வைத்தார். 

விழாவில் திருக்குறள் அரசு கழகம் மாநில அமைப்பு செயலாளர் முத்துக்குமரன், சாந்தி கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாரியப்பன், அரிமா சங்க தலைவர் சிவசுப்பிரமணியன், கெங்கை கொண்டான் நூலகர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர். 

பின்னர் தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்க செயலாளர் கலைஅரசன் தலைமையில் 50 கவிஞர்கள் கைகளில் திருவள்ளுவர் படத்தை ஏந்தியவாறே நடைபயணம் புறப்பட்டனர். தங்களது கோரிக்கை வாசகங்களை கொண்ட அட்டைகளையும் ஏந்தி சென்றார்கள்.

அவர்கள் பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வரும் 22ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் சென்றடைவார்கள். 

Make a free website with Yola